இந்திய முன்னாள் வெளியுறவுத் துறை செயலரும் மூத்த இராஜதந்திரியுமான சிவ்சங்கர் மேனன் இலங்கை வந்துள்ளார்.
கொழும்பில் இன்று ஆரம்பமாகவுள்ள இந்து சமுத்திர பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்த கூட்டத்தில் ஆஸ்திரேலியா, சீனா, பிரான்ஸ், இந்தியா, ஜப்பான், நோர்வே, ரஷ்ய சம்மேளனம், சிங்கப்பூர் ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.
நாளை வரை இலங்கையில் தங்கியிருக்கும் சிவசங்கர் மேனன் முக்கிய அரசியல் தலைமைகளை சந்திக்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment