கொலைகாரன், அக்னி சிறகுகள், தமிழரசன் படங்களில் தற்போது நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி .
கொலைகாரன் படத்தில் அர்ஜூன் வில்லனாக நடிக்கிறார். ஆஷிமா நெர்வால் ஹீரோயின் ஆண்ட்ரீவ் லூயிஸ் இயக்குகிறார்.
அக்னி சிறகுகள் படத்தை மூடர்கூடம் நவீன் இயக்குகிறார். அருண் விஜய் வில்லனாக நடிக்க. ஷாலினி பாண்டே ஹீரோயின். தமிழரசன் படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார்.
இந்தப் படங்கள் தவிர தற்போது காக்கி என்ற புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார் விஜய் ஆண்டனி
இதன் படப்பிடிப்பு இன்று ஏவி.எம் ஸ்டூடியோவில் பூஜையுடன் ஆரம்பித்தது. இதிலும் விஜய் ஆண்டனி பொலிஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார்.
விஜய் ஆண்டனி உடன் ஜெய், சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். ஓப்பன் தியேட்டர் சார்பில் தமிழினி, லிங்கவேலன், சகுதேவ், முத்துலட்சுமி தயாரிக்கிறார்கள்.
0 comments:
Post a Comment