பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு தொடர்பாக தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சிபிசிஐடி பொலிஸார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
பொள்ளாச்சியில் இளம்பெண்களை பேஸ்புக் மூலம் ஏமாற்றி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி அதை வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக திருநாவுக்கரசு, சதீஸ், வசந்தகுமார், சபரி ராஜன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் உள்ளனர்.
குண்டர் சட்டத்தை இரண்டு வகையில் பயன்படுத்துகிறார்கள். அரசை எதிர்ப்பவர்களை தவறாக சுட்டிக்காட்டி குண்டர் சட்டம் போடுகிறார்கள். அரசாங்கத்திற்கு நெருக்கமாக உள்ளவர்களை பாதுகாக்கவும் குண்டர் சட்ட்த்தை பயன்படுத்துகிறார்கள். இந்த நேரத்தில் சம்மந்தப்பட்டவர்களை வெளியே விட்டால் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று அவர்களை குண்டர் சட்டத்தில் போட்டுள்ளார்கள் என்று மக்கள் கருத்தினார்கள்.
இச்சம்பவத்தில் பொள்ளாச்சியில் உள்ள அரசியல் பிரமுகர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், இதனால் பொலிஸார் முழுமையான விசாரணை செய்யவில்லை என்றும் புகார் எழுந்தது. இதன் காரணமாக இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.
#PollachiIssue #SexualHarassment #PollachiUpdates #CBCIDPolice #Congress #MayuraJeyakumar #PollachiAbuse #Thirunavukkarasu #TamilNewsKing
0 comments:
Post a Comment