யாழ்.சாவகச்சேரி மட்டுவில் பகுதி வீடொன்றின்மீது இன்று அதிகாலை சரமாரியாகத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் மட்டுவில் வின்சன் வீதியில் இன்று அதிகாலை நடந்துள்ளது.
வாள் மற்றும் கோடாரிகளால் தாக்குதல் நடத்தப்பட்ட வீடு சமாதான நீதவான் ஒருவரின் வீடு என்றும் கூறப்படுகிறது.
சாவகச்சேரிப் பொலிஸார் மற்றும் 119 அவசரப் பொலிஸாருக்கு அறிவித்தல் கொடுத்தும் சம்பவ இடத்திற்கு உரிய நேரத்தில் பொலிஸார் செல்லவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இலக்கத் தகடுகள் அற்ற மோட்டார் சைக்கிளில் தலைக் கவசம் இல்லாது வந்த மர்ம நபர்களாளேயே இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தாக்குதல் குழு தொடர்ந்தும் அப்பகுதிகளில் அட்டகாசம் செய்ததால் அங்கு பதற்ற நிலை ஏற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment