'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆதிக் ரவிசந்திரன்.
தொடர்ந்து சிம்புவை வைத்து 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தை இயக்கினார்.
தற்போது காதலைத்தேடி நித்யாநந்தா என்ற படத்தை இயக்கிவரும் ஆதிக் ரவிச்சந்திரன், அஜித் நடிக்கும் 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடிகராக அறிமுகமாகிறார்.
ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் அவரது தோழிகளை பாலியல் தொந்தரவு செய்யும் பணக்காரவீட்டுப்பையனாக நடிக்கும் ஆதிக் ரவிச்சந்திரன், அடுத்து அருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் இணைந்து நடிக்கும் 'K13' படத்திலும் ஒரு கேரக்டரில் நடித்து வருகிறார்.
எஸ்.பி.சினிமாஸ் நிறுவனம் சார்பில் எஸ்.பி.ஷங்கர் மற்றும் சாந்த பிரியா இருவரும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ்.இசை அமைக்கிறார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த இரண்டு படங்களைத் அடுத்து, ஹீரோவாக நடிப்பது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் ஆதிக் ரவிசந்திரன்.
0 comments:
Post a Comment