திருகேதீஸ்வர ஆலய விவகாரம் சந்தேக நபர்கள் பிணையில் செல்ல அனுமதி!



மன்னார் மாந்தை சந்தியில் அமைக்கப்பட்டிருந்த  திருகேதீஸ்வர ஆலயத்தின் அலங்கார நுழைவாயில் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான சந்தேக நபர்கள் சட்டத்தரணி ஊடாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (24)  காலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் பிரசன்னமாகி இருந்தனர்.

அருட்தந்தை ஒருவர் உற்பட 10 பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை சட்டத்தரணி ஊடாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் பிரசன்னமாகி இருந்தனர்.
இவர்களில் மூன்று பெண்களும்,ஆறு ஆண்களும் அடங்குகின்றனர்.குறித்த 10 பேரிடமும் வாக்கு மூலத்தை பெற்றுக் கொண்ட மன்னார் பொலிஸார் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ அருட்தந்தையினை சொந்தப் பிணையிலும், ஏனைய 9 பேரையும் 1 இலட்சம் ரூபாய் சரீர பிணையிலும் செல்ல அனுமதித்தார். 
மீண்டும் இம்மாதம்; 29 ஆம் திகதிக்கு வழக்கு விசாரனை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Share on Google Plus

About Kayathri

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment