குடிபோதையில் வாகனத்தை செலுத்திய ஆயிரத்து 321 பேர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
கடந்த 14 ஆம் திகதி முதல் நேற்று 19 ஆம் திகதிவரை குறித்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகப் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
கைதுசெய்யப்பட்டவர்கள் மீது போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 27 ஆயிரத்து 954 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment