இராணுவ அதிகாரிகள் சிலர் சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,
வெள்ளைக்கொடிச் சம்பவத்துடன் தொடர்புடைய குரல் பதிவுகள் என்னிடம் இருக்கின்றன. தேவையான நேரத்தில் அவற்றை முன்வைக்க நான் தயாராக உள்ளேன்.
இராணுவ அதிகாரிகள் மேற்கொண்ட சட்டவிரோதமான நடவடிக்கைகள் தொடர்பிலான காணொளிகளும் என்னிடம் இருக்கின்றன. அவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் - என்றார்.
0 comments:
Post a Comment