நாடாளுமன்ற மக்களவையின் ஆயுள்காலம் வரும் ஜூன் மாதம் 3ஆம் தேதி முடிவு பெறும் நிலையில், இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் செய்தியாளர் சந்திப்பின் போது மக்களவை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.
இதையொட்டி வரும் ஏப்ரல், மே மாதங்களில் பல கட்டங்களாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில் தேசிய கட்சிகளும் சரி, மாநில கட்சிகளும் சரி கூட்டணி அமைத்து, தீவிர பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன.
இதில் 7 அல்லது 10 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படம் எனவும், முதல்கட்டத் தேர்தல் மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இதே போல் மக்களவை தேர்தல் தேதி உடன், தமிழகத்தில் காலியாகவுள்ள 21 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரியவந்துள்ளது
0 comments:
Post a Comment