காதலிக்க மறுத்ததால் இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.
நேற்று நடந்த இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் பத்தனம்திட்ட மாவட்டத்தில் ரேடியாலஜி படித்து வரும் மாணவி ஒருவரை
இதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார்.
குறித்த மாணவி இளைஞனின் காதலை ஏற்க மறுத்துள்ளார், தொடர்ந்து மாணவியின் பெற்றோரை இளைஞர் அணுகிய போதும் அவர்களும் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.
இதனால் கோபமடைந்த இளைஞன் கல்லூரிக்குச் சென்ற மாணவியை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.
மறுபடியும் மாணவி சம்மதம் சொல்லாததால் உடனடியாக தான் கொண்டு வந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் மாணவியைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்ந்தனர், குறித்த இளைஞனும் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment