வைரம் மற்றும் இரத்தினக்கற்கள் கொள்ளைக்கு உதவிய குற்றச்சாட்டில் பேலியகொடைப் பகுதியில் வைத்து இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட விசாரணை பிரிவால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
கொள்ளையின் பின்னர் 700 கோடி ரூபாய் பெறுமதியான வைரம் மற்றும் இரத்தினக்கற்களை நாட்டில் இருந்து வெளியேற்றுவதற்கு இவர்கள் உதவி புரிந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இதில் ஒருவரின் சகோதரர், டுபாயில் கைது செய்யப்பட்ட மாக்கந்துரே மதூசுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர் எனத் தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment