தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் வவுனியா செட்டிக்குளம் பகுதியில் நடந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை, சில வாரங்களுக்கு பின்னர் மகளுக்குத் திருமணமும் செய்து வைத்துள்ளார். திருமணமானதன் பின்னர் குறித்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் பாலியல் ரீதியில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது தந்தை தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என கணவரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தையடுத்து, கடந்த 21 ஆம் திகதி பாதிக்கப்பட்ட பெண்ணால் செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் கடந்த 21.03..2019 அன்று குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரணை செய்த வவுனியா மாவட்ட நீதவான் சந்தேக நபரை ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் செல்ல உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
#SexualHarassment #VavuniyaNews #VavuniyaDistrictCourt #ChettikulamNews #SrilankaPolice #TamilNewsKing
0 comments:
Post a Comment