தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியை நீடித்துக் கொள்வதில் ரவிசாஷ்திரிக்கு சிக்கல் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உலகக் கிண்ணத் தொடரின் பின்னரும் அவரே இந்திய அணிக்கான தலைமைப் பயிற்றுவிப்பாளராகத் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் அவரது ஒப்பந்தத்தில், குறித்த பதவியை நீடிப்பதற்கான சரத்துகள் எவையும் சேர்க்கப்படவில்லை.
இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளருக்கான தேர்வை முதலிலிருந்து நடத்தி அதன் ஊடாகவே தெரிவுசெய்யப்பட வேண்டியுள்ளது.
இந்த நிலையில் ரவி சாஷ்த்திரி இந்தமுறை தேர்வுகளுக்கு உட்பட்டு மீண்டும் அந்த பதவிக்கு உள்வாங்கப்படக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment