மின்சார சபையின் அறிவிப்பு!


நாளொன்றுக்கு 4 மணி நேரம் மின்சார விநியோகத் தடையை அமுல்படுத்துவது குறித்து இலங்கை மின்சார சபை இன்றைய தினம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், மின்சார விநியோகத்தை தடை செய்யும் முறைமை குறித்து தமக்கு அறிவிக்கப்படவில்லை என பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாட்டில் வெப்பமான வானிலை நிலவுகின்ற நிலையில், மின்சாரத்திற்கான கேள்வி அதிகரித்துள்ளமையினால், அனைத்து பகுதிகளிலும் நாளொன்றுக்கு 4 மணி நேர மின்சார விநியோகத் தடையை அமுல்படுத்த நேரிடும் என மின்சார பொறியிலாளர் சங்கம், இலங்கை மின்சார சபைக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதற்கமைய, காலை 8.30 முதல் முற்பகல் 11.30 வரையும், முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 2.30 வரையும், பிற்பகல் 2.30 முதல் மாலை 5.30 வரையும் மின்சார விநியோகத் தடையை அமுல்படுத்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், மாலை 6.00 மணிமுதல், இரவு 7.00 மணிவரையும், 7.00 மணிமுதல் இரவு 8.00 மணி வரையும், 8.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரையும், 9.00 மணிமுதல் இரவு 10.00 மணி வரையும் ஒரு மணித்தியாலத்திற்கு மின்சார விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேநேரம், சனிக்கிழமை காலை 8.30 முதல் முற்பகல் 10.45 வரையும், முற்பகல் 10.45 முதல் பிற்பகல் ஒரு மணிவரையும், ஒரு மணி முதல் பிற்பகல் 3.15 வரையும், பிற்பகல் 3.15 முதல் மாலை 5.30 வரையும் மின்சார விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

எனினும், ஞாயிற்றுக்கிழமைகளில் மின்சார விநியோகத் தடை இடம்பெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share on Google Plus

About Kayathri

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment