நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் அதிக வெப்பமுடனான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதிக வெப்பத்துடனான வானிலை நிலவும் சந்தர்ப்பங்களில் அதிக நீரை பருகுமாறும், நிழலான இடங்களில் தரித்திருக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரித்துள்ள வெப்பத்தால் இதுவரையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் மழைவீழ்ச்சி கிடைக்காமையால் நீர் நிலைகளும் வற்றியுள்ளது.
இயலுமான வரையில் மக்கள் மதிய நேரங்களில் வெளிவேலைகளில் ஈடுபடுவதை குறைத்துக்கொள்வதுடன் அதிக நீராகாரங்களை அருந்துமாறு வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் அண்மையில் அறிவுறுத்தல் ஒன்றையும் விடுத்துள்ளது.
தாகம் இல்லாவிட்டாலும் தொடர்ந்து நீர் அல்லது நீராகாரங்களை எடுத்துக்கொள்ளுங்கள். பழங்களை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். வெளியில் வேலை செய்யும் போது தொப்பி அல்லது குடை பயன்படுத்துவதோடு ஈரத் துணியை தலை, கழுத்து, முகம் மற்றும் அவயவங்களில் பயன்படுத்துவது நல்லது.
வெப்பத்தால் பாதிக்கப் படக்கூடிய உதவி தேவைப்படும் குழந்தைகள், முதியோர், நோயாளிகள், பலவீனமானவர்கள், நண்பர்கள், குடும்பத்தார், அயலார் ஆகியோரை அடிக்கடி கவனத்தில் கொள்ளுங்கள்.
#Summer #SaveWater #SaveTrees #GlobalWarming #heat #WeatherReport #Weather #SummerHot #NoWater #BurningGlobe #BurningCountries #BurningWeather #TamilNewsKing
0 comments:
Post a Comment