காதல் திருமணம் தற்கொலை செய்த தம்பதி

காதல் திருமணம் செய்த தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தருமபுரி மாவட்டத்தின் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (35). இவருடைய மனைவி அருணா (25). 

இருவரும்  மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு கனிஷ்கா (1½) என்ற மகள் உள்ளார்.

 கனிஷ்காவுக்கு சமீபத்தில், உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.  உள்ளூர்   மருத்துவமனைகளில்  காட்டியும் சரியாகாததால் கோவையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சையளித்தனர்.

பின்னர் நேற்று முன்தினம் ஊர் திரும்பினர். நேற்று சரவணனின் உறவினர் ஒருவர் இறந்து விட இதற்காக சரவணனின் உறவினர்கள் அங்கு சென்று விட்டு நேற்று மாலை  ஊருக்குத் திரும்பினார்கள்.

அப்போது உறவினர் ஒருவர் சரவணன் வீட்டுக்கு வந்த போது சரவணன், அருணா, கனிஷ்கா ஆகிய 3 பேரும் விஷம் குடித்த நிலையில் வீட்டில் மயங்கி கிடந்தனர்.

அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அங்கு தம்பதியர்  உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை தெரிவித்தது. குழந்தை கனிஷ்காவுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவரும் தற்கொலை செய்தார்களா அல்லது வேறு காரணமா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment