யாழ்ப்பாணம் பல்கலைக் கழக சமூகம் மேற்கொள்ளும் மாபெரும் பேரணி சற்றுமுன்னர் ஆரம்பமானது.
போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது எனவும் கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்.பல்கலைக் கழகத்திலிருந்து ஆரம்பித்த பேரணி முற்றவெளி நோக்கி நகர்ந்த வண்ணம் உள்ளது.
0 comments:
Post a Comment