யாழ்ப்பாணம், வடமராட்சி வலயப் பாடசாலைகளுக்கிடையிலான கரப்பந்தாட்டத்தில் 16 வயது பெண்கள் பிரிவில் சென்.தோமஸ் ஆர். சி வித்தியாலய அணி சம்பியனாகியது.
வடமராட்சி வலயப் பாடசாலைகளுக்கிடையிலான கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதியாட்டங்கள் நேற்று கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் பருத்தித்துறை சென்தோமஸ் ஆர் சி வித்தியாலயமும் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியும் மோதின.
மூன்று செற் கொண்ட இச் சுற்றுப்போட்டியில் 25:17 25:16. என்ற புள்ளி பெற்று 2:0 என்ற. நேர் செற்றில் வெற்றி பெற்று சம்பியனாகியது சென்தோமஸ்.
மூன்றாமிடத்தை பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள்உயர்தரப் பாடசாலை பெற்றது.
0 comments:
Post a Comment