"இலங்கை எமது நட்புநாடு என்ற வகையில் சகல விடயங்களிலும் இந்தியா துணை நிற்கும். குறிப்பாக தேசிய ஒற்றுமை, மனித உரிமை போன்ற விடயங்கள் மற்றும் இலங்கைத் தமிழர் பிரச்சினைகளைத் தீர்க்க அதிக கரிசனை கொண்டுள்ளோம்." இவ்வாறு இந்தியா தெரிவித்திருந்தது.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 40ஆவது கூட்டத் தொடரின் நேற்றுமுன்தின அமர்வில் இலங்கை தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அறிக்கையைத் தொடர்ந்து உரையாற்றியபோதே இந்தியப் பிரதிநிதி ரஜீவ் கே சந்தர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஈழத்தழிழர் மீதான இந்தக் கரிசனை யுத்த காலத்தின்போது இந்தியாவுக்கு எங்கே போனது? இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி அளித்து இலட்சக்கணக்கில் தமிழர்களைக் கொன்றொழிக்கும்போது இந்தியா சொன்ன இந்த மனித உரிமை எங்கு போனது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
தமிழர் அழிவில் குளிர்காய்ந்த இந்தியாவுக்கு இப்போது மட்டும் ஏன் இந்த அக்கறை. இந்தியா தமிழரைக் காப்பதுபோல் நாடகமாடுகிறதா அல்லது இரட்டை வேடம் போடுகிறதா சமூகவியலாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
#SrilankaWar #WarCrimes #India #MahindaRajapaksa #GotabayaRajapaksa #UN #RajivKChander #IndianAmbassador #UNHRC #HumanRightsCouncil #TamilNewsKing
0 comments:
Post a Comment