பிரபுதேவா, தமன்னா நடிக்கும் படம் - 'தேவி-2' படம் ஏப்ரல் 5 ஆம் திகதி வெளியாகவிருப்பதாக இப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சமீபத்தில் நடந்த 'LKG' படத்தின் வெற்றிவிழாவில் தெரிவித்தார்.
த்தை ஏ.எல்.விஜய் இயக்கியிருக்கும் 'தேவி-2' ஏப்ரல் 5 ஆம் திகதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் படத்தின் வெளியீட்டை ஒரு வாரம் தள்ளி, அதாவது ஏப்ரல் 12 ஆம் திகதி வெளியாகும் என்ற புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதே தினத்தில்தான் எ.எல். விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார், சாயிஷா நடித்துள்ள 'வாட்ச்மேன்' படமும் வெளியாகவிருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பை படத்தின் தயாரிப்பு தரப்பு வெளியிட்டது மட்டுமல்ல ஏப்ரல் 12 வெளியீடு என்று விளம்பரமும் செய்து வருகின்றனர்.
இதனால் ஏ.எல். விஜய் இயக்கிய இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகும் சூழல் உருவாகியுள்ளது.
0 comments:
Post a Comment