மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகளில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் உடல்கூற்று காபன் பரிசோதனை அறிக்கையானது சட்ட பூர்வமாக நேற்றைய தினம் கிடைக்கப்பெற்றதன் பின்னர் இன்றைய தினம் குறித்த அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது.
மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் கடந்த மாதம் காபன் பரிசோதனைக்காக சட்டவைத்திய அதிகாரி தலைமையில் அமெரிக்காவில் உள்ள புளோரிடவில் உள்ள ஆய்வு கூடத்திற்கு மேலதிக ஆய்வுகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இன்றைய தினம் குறித்த அறிக்கையினை சட்டத்தரணி திரு.டினேசன் ஊடக ஊடகவியளார் பெற்று கொண்ட போதும் குறித்த மனித எச்சங்களின் ஆண்டுகளை துல்லியமாக பெற்று கொள்ளும் விதமாக அவ் அறிக்கை இன்மையால் குறித்த விடயங்கள் தொடர்பான அதே நேரத்தில் குறித்த மனித புதைகுழியின் காலத்தை வெளிப்படுத்த முடியவில்லை.
அத்துடன் குறித்த அறிக்கையின் விவரங்களை அறிவதற்கான செயற்பாடுகள் நிபுணர்குழுவினரால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
குறித்த பரிசோதனை அறிக்கையானது 14 நாட்களில் கிடைக்கப் பெறும் என எதிர் பார்க்கப்பட்ட போது சட்டரீதியாக கடந்த நாட்களில் கிடைக்க பெறாத நிலையில் நேற்றை தினம் குறித்த அறிகையானது சட்டரீதியான ஆவணமாக மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு கிடக்கப்பெற்றது
அதே நேரத்தில் குறித்த அறிக்கை தொடர்பான எந்த விபரங்களியும் தன்னால் வழங்க முடியாது எனவும் அவ் அறிக்கை தொடர்பாக ஆர்வம் உள்ளவர்கள் குறித்த அறிக்கையினை மன்னார் நீதவான் நீதி மன்றத்தின் ஊடாக பெற்று கொள்ள முடியும் என நேற்றைய தினம் சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்திருந்தார்.
அத்தோடு இன்றைய தினம் குறித்த மனித புதைக்குழி அகழ்வு பணிகளை பார்வையிடுவதற்காக இலங்கைகான பிரித்தானிய தூதரக அதிகாரிகள் இன்று காலை 10.30 மனிக்கு நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டு குறித்த அகழ்வு பணிகள் தொடர்பான விபரங்களை பெற்றுக்கொண்டனர்.
இதுவரை குறித்த மனித புதைகுழியில் இருந்து 336 மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் 318 மனித எச்சங்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க
0 comments:
Post a Comment