திருட சென்று திரும்பிய வேளை பொருட்கள் பிரிப்பதில் பிரச்சினை ஏற்பட பொலிஸில் சிக்கிய திருடன் மூன்றாவது தளத்திலிருந்து கீழே குதித்த சம்பவம் ஒன்று பாரிஸ்சில் நடந்துள்ளது.
பாரிஸ்சின் rue Cauchy வீதியில் உள்ள அடுக்குமாடி வீடு ஒன்றில் நபர் ஒருவர் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். அப்போது கட்டடத்தின் எதிரில் உள்ள மற்றொரு கட்டடத்தில் சிலர் சத்தமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதை அவதானித்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் அங்கிருந்த நால்வரைக் கைது செய்தனர்.
இந்த நிலையில் அவர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் நால்வரும் கொள்ளையர்கள் எனவும், கொள்ளையிட்ட பொருட்களை பங்கு பிரிப்பதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டமை தெரியவந்துள்ளது.
இதில் மூவரை பிடித்த பொலிஸார், நான்காவது நபரை தப்பிக இயலாத வகையில் தடுத்ததால், மூன்றாவது தளத்திலிருந்து அவர் கீழே குதித்துள்ளார்.
வெற்றுத் தரையில் விழுந்த திருடனின் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
0 comments:
Post a Comment