ஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர்.
ஜப்பானில் சொகுசு படகு ஒன்று 125 பேருடன் நிகாடா துறைமுகத்தில் இருந்து சாடோ தீவை நோக்கி சென்று கொண்டிருந்தது. மிகவும் வேகமாக நடுக்கடலில் அந்த படகு சென்று கொண்டிருக்கும்போது திடீரென ஒரு பொருள் மீது பயங்கரமாக மோதியது.
வேகமாக சென்ற படகு திடீரென ஒரு பொருள் மீது மோதியதால் பயணிகள் தடுமாறினார்கள். முன்னால் இருந்த இருக்கை மீது பல பயணிகள் மோதினர். சிலர் இருக்கையிலிருந்து கீழே விழுந்தனர். இதனால் 80 பயணிகள் காயம் அடைந்தனர். இதில் 13 பேர் மிகவும் கவலைக்கிடமாக உள்ளனர்.
சொகுசு படகைச் சேர்ந்தவர்கள் திமிங்கலம் மீது மோதியதால்தான் இந்த விபத்து ஏற்பட்டது என்று கூறுகின்றனர்
0 comments:
Post a Comment