முஸ்லிம் - சிங்களவர் மோதல் ; அதிரடிப்படை குவிப்பு

பாணந்துறை சரிக்கமுல்ல திக்கல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவம் ஒன்றையடுத்து முஸ்லிம் இளைஞரின் வீடு மீது நேற்று இரவு சிங்களவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து  நடத்தப்பட்ட  இரு தரப்புத் தாக்குதல்களாலும் பலர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேல்மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி, நாடாளுமன்ற உறுப்பினர் பௌசி ஆகியோர் பிரச்சினையில் உடன் தலையிட்டு பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்பில் விசேட அதிரடிப் படையினர் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் களமிறக்கப்பட்டதைத் தொடர்ந்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

 காயமடைந்த முஸ்லிம்களை மருத்துவமனையில் சேர்க்க சிலர் இடையூறு விளைவித்தனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, விபத்து மற்றும் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நான்கு முஸ்லிம் இளைஞர்கள் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment