இந்திய விமானப்படை வீரரான விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார். இதனையடுத்து, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் இம்ரான் கான், நல்லெண்ண அடிப்படையில் எவ்வித நிபந்தனையுமின்றி அபிநந்தனை விடுவிக்கப்படுவார் என்று அறிவித்தார்.
அதன்படி பாகிஸ்தானின் ராவல் பிண்டி ராணுவ முகாமிலிருந்த அபிநந்தன் லாகூருக்கு நேற்று மாலை 4 மணியளவில் கொண்டு வரப்பட்டார். பின்னர் வாகா எல்லைக்கு கொண்டு வரப்பட்ட அபிநந்தனை இரவு 9.10 மணிக்கு இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அப்போது அபிநந்தன் கம்பீர தோற்றத்துடன், இந்திய எல்லையான அட்டாரி நோக்கி நடந்து வந்தார். அவர் தாயகம் திரும்பியதை நேரில் பார்த்தவர்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அது மட்டுமின்றி, ஒட்டுமொத்த தேசமும் அவரை வரவேற்று மகிழ்ந்தது.
முன்னதாக வாகா எல்லைக்கு அழைத்து வரப்பட்ட அபிநந்தனுடன் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக அதிகாரி மற்றும் ராணுவ அதிகாரிகள் அபிநந்தனை எல்லைக்கு அழைத்து வந்தனர். அப்போது அபிநந்தனுடன் ஒரு பெண் அதிகாரி இருந்தார். நேற்று சமூக வலைத்தளங்களில் அபிநந்தனுடன் சேர்ந்து அந்தப் பெண்ணும் வைரல் ஆனார். அந்தப் பெண் அதிகாரியின் பெயர் டாக்டர் ஃபஹிரா பக்டி. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் இந்திய விவகாரங்களை கையாளும் இயக்குநர் தான் ஃபஹிரா பக்டி.
பாகிஸ்தானிலுள்ள இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் ஃபஹிரா, பாகிஸ்தான் சிறைச்சாலையிலுள்ள குல்பூஷன் ஜாதவ் வழக்கை கையாளும் பிரதான பாகிஸ்தான் அதிகாரிகளில் ஒருவர். இந்திய உளவாளி என்று குற்றம் சாட்டப்பட்ட குல்பூஷன் ஜாதவை, கடந்த ஆண்டு இஸ்லாமாபாத்தில் அவரது தாய் மற்றும் அவரது மனைவி சந்தித்த போது ஃபஹிரா பக்டி உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment