பயணிகள் விமானத்தில் ஆண் தொழிலதிபர் ஒருவர் பெண்ணிடம் ஆபாச படம் காட்டி சில்மிஷத்தில் ஈடுபட்டதால் பொலிசார் அவரை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
மும்பையில் இருந்து தனியார் விமானம் ஒன்று நேற்று முன் தினம் இரவும் 11 மணியளவில் சென்னைக்கு புறப்பட்டது.
இந்த விமானத்தில் மும்பையைச் சேர்ந்த தொழிபதிபர் ராகேஷ்(56) என்பவர் தன்னுடைய தொழில் சம்பந்தமாக சென்னைக்கு அந்த விமானத்தில் வந்துள்ளார்.
அப்போது அவருடைய சீட்டிற்கு அருகே சென்னையைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் தன் கைக்குழந்தையுடன் பயணம் செய்துள்ளார்.
இந்நிலையில் விமானம் பறந்த போது, ராகேஷ் தன்னுடைய மொபைல் போனில் ஆபாசபடங்களை பார்த்ததாக கூறப்படுகிறது.
அப்போது அவர் வேண்டுமென்றே தன்னுடைய செல்போனை அந்த பெண் பார்க்கும் படி திருப்பி காட்டியுள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண், உடனடியாக தனது முகத்தை மறுபக்கமாக திருப்பி கொண்டு, தனது சீட்டின் ஓரமாக ஒதுங்கினார்.
இருப்பினும் ராகேஷ் அந்த பெண்ணை தொடுவது போன பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அந்த பெண் உடனடியாக விமான பணிப்பெண்ணிடம் புகார் தெரிவிக்க, பணிப்பெண்கள் அவரை கண்டித்து, அதன் பின் அந்த பெண்ணிற்கு வேறொரு இருக்கையை கொடுத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தலைமை விமானிக்கும் பணிப்பெண்கள் புகார் தெரிவித்ததால், பாதிக்கப்பட்ட பெண் பயணியிடம் விமானி விசாரித்தார்.
0 comments:
Post a Comment