வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாம் நாள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் பாரிய குற்றமிழைத்து விட்டனர். இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக செயற்படும் விடயங்களில் சுதந்திர கட்சியினர் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக செயற்பட வேண்டுமாயின் பலமான பரந்துப்பட்ட கூட்டணி சுதந்திர கட்சிக்கு இடையில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த விடயத்தில் பொதுஜன பெரமுனவினர் முழுமையான ஒத்துழைப்புடன் செயற்படுகின்றோம்.
ஆனால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் ஒரு சில விடயங்களில் தமது விருப்பத்தின் பெயரில் செயற்படுவது ஆளும் தரப்பினருக்கு சாதகமாக காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment