கூகுள் பிளஸ் கணக்குகள் எதிர்வரும், ஏப்ரல் 2 ஆம் திகதி முதல் நிரந்தரமாக நிறுத்தப்படுவதால், தங்கள் ஆவணங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு அந்த நிறுவனம் கேட்டுள்ளது.
சமூகவலைதளங்களான, ஃபேஸ்புக், டுவிட்டர் நிறுவனங்களுக்குப் போட்டியாக கூகுள் நிறுவனத்தால் கூகுள் பிளஸ் வலைத்தளம் தொடங்கப்பட்டது.
ஆனால் ஃபேஸ்புக், டுவிட்டர் போல வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு இல்லாததாலும், கூகுள் பிளஸ்சில் 5 இலட்சம் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாலும் கூகுள் நிறுவனம் அதிர்ச்சியடைந்தது.
கூகுள் பிளஸ்சில் பாதுகாப்பு அம்சங்களும் குறைபாடுடன் இருந்ததால் கடந்த ஆண்டே கூகுள் பிளஸ்ஸை மூடுவதென குறித்த நிறுவனம் அறிவித்தது. ஆனாலும் தொடர்ந்து பயன்பாட்டிலிருந்து வந்தது.
இந்த நிலையில் அடுத்த மாதம் 2 ஆம் திகதி முதல் கூகுள் பிளஸ் நிரந்தரமாக மூடப்படுவதாகவும், பயனாளர்கள் தங்கள் தகவல்களை சேமித்துக் கொள்ளும்படியும் கூகுள் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.
0 comments:
Post a Comment