மின்சாரத்தினை சிக்கனமாக பாவிக்க கோரிக்கை!
நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக மின்சார தேவை அதிகரித்துள்ளதனால் மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்துமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மின்சாரத்துறை அமைச்சு மக்களிடம் இக் கோரிக்கையை விடுத்துள்ளது.
இதேவேளை வெப்ப காலநிலை காரணமாக மின்சாரம் உற்பத்தி செய்யும் நீர் தேக்கங்களில் நீர் மட்டம் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொது விக்டோரியா நீர் தேக்கத்தின் நீர் மட்டம் 45.1 வீதமாக பதிவாகியுள்ளதுடன் கொத்மலை ரன்தெம்பே பொவதென்ன மாவுஸ்ஸகலை நீர் தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment