முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் பகுதியில் வறிய நிலையில் உள்ள குடும்பங்களுக்கு ஒருதொகை தென்னை மரக்கன்றுகள் நேற்று வழங்கப்பட்டது.
அம்பகாமம் கிராமத்தில் வசிக்கும் குடும்பங்களுக்கே ரூபா 8 ஆயிரத்து 750 பெறுமதியான 50 தென்னை மரக்கன்றுகள் பொன்மணி அறக்கட்டளை நிறுவுனர் கு. முத்துக்குமாரால் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் ரூபா 23 ஆயிரத்து 750 பெறுமதியான தென்னை மரக்கன்றுகள் ஜேம்ஸ்புரம், கரடிகுன்று ஆகிய பகுதிகளில் எதிர்வரும் 11 ஆம் திகதி வழங்கி வைக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டது.
0 comments:
Post a Comment