சுகாதாரத் திணைக்களத்தில் அனுமதி பெற்றவர்களிடம் மாத்திரமே, கோவில் நேர்த்திக்கு அடியார்கள் முட்கள் குத்தி காவடி எடுக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார முறைகள் பேணாத முட்களால் நோய்கள் பரவும் அபாயம் உள்ளதால் அனுமதி பெறவேண்டுமென்று சாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினர் அறிவித்துள்ளனர்.
காவடி எடுப்போரின் நலன் கருதி காவடி முள் வைத்திருப்போரும் முட்காவடி எடுக்கவுள்ளோரும் பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னரே காவடி எடுக்க முடியும்
அனுமதி பெறாமல் நேர்த்திக்காகக் காவடி எடுக்க முயன்றால் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என்றும் சுகாதாரத் திணைக்களத்தினர் அறிவித்துள்ளனர்.
சாவகச்சேரி மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் ஆலய பங்குனித் திங்கள் பொங்கல் உற்சவத்தையொட்டி வெளிட்டுள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு அறிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment