சிவராத்திரியை முன்னிட்டு காணிகள் விடுவிப்பு

மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மயிலிட்டி வடக்கு மற்றும்  கிழக்கிலும் அதன் அண்டிய பகுதிகளில் இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த காணிகள் விடுவிக்கப்பட்டன.

சுமார் 20 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக படைத்தரப்பு அறிவித்துள்ளது. இராணுவத் தளபதியின் பணிப்புரைக்கு அமைய காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் இதுதொடர்பான நிகழ்வு இடம்பெற்றது. பாதுகாப்புப் படைகளின் யாழ் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி இதற்குரிய ஆவணங்களை யாழ் மாவட்டச் செயலர் என் வேதநாயகனிடம் கையளித்தார். 

இதே வேளை மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி நேற்று வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் இராகவனை சந்தித்திருந்தார்.

இதன் போது வடக்கின் பாதுகாப்பு நிலவரம் மற்றும் யாழ்ப்பாணத்தில் படையினர் முன்னெடுக்கும் நல்லிணக்க நடைமுறைகள் தொடர்பிலும் அவர் விளக்கம் அளித்ததாக ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது. 

ஜனாதிபதியின் நல்லிணக்க வேலைத்திட்டத்திற்கு அமைய வடக்கில் பெருமளவு காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ் கட்டளைத் தளபதி மேலும் தெரிவித்தார். 




Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment