சிறுமியிடம் பாலியல் ரீதியாக நடந்துகொண்ட வழக்கில் மூன்று வருட சிறைத்தண்டனை பெற்ற இங்கிலாந்து கால்பந்து வீரரை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக அவருடைய தந்தை நள்ளிரவிலிருந்து சிறையிக்கு வெளியில் காரில் காத்துக்கொண்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த பிரபல கால்பந்து வீரரான ஆடம் ஜான்சன், 15 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியில் முத்தம் கொடுத்து, கட்டியணைத்ததாக முறைப்பாடு பதிவாகியது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், 800 க்கும் மேற்பட்ட குறுஞ்செய்திகளை அந்த சிறுமிக்கு அனுப்பியிருப்பதும், அதனை முற்றிலும் அழித்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இந்த வழக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோது 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
3 ஆண்டுகால சிறைத்தண்டனை தற்போது முடிவடைத்திருக்கும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அவர் விடுவிக்கப்படவுள்ளார்.
சிறையிலிருந்து வெளியில் சென்றதும் ஜான்சன் தனியாக தனது மகளைக் கூடப் பார்க்க முடியாது என உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் அவரைப் பொதுமக்கள் பார்ப்பதற்கு முன்பே வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக நள்ளிரவிலிருந்து அவருடைய தந்தை, சிறைக்கு வெளியில் காரில் காத்துக்கொண்டிருந்துள்ளார்.
ஆடம் வெளியில் வந்ததும் தனது கால்பந்து வாழ்க்கையை மீண்டும் ஆரம்பிக்க ஆர்வமாகவுள்ளார். ஆனால் இங்கிலாந்து அதற்கு வாய்ப்பு கொடுக்குமா என்பதுதான் பெரும் கேள்விக்குறி.
0 comments:
Post a Comment