விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பயனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.
குடத்தனை கிழக்கை சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
கடந்த மாதம் பருத்தித்துறை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் ஹன்டர் வாகனம் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதிலேயே குறித்த இளைஞன் படுகாயமடைந்தார்.
படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில், சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அதி தீவிரசிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையிலேயே சிகிச்சை பயனின்றி குறித்த இளைஞர் நேற்று மாலை உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment