சிம்பு காதலித்தவர்களில் நடிகை ஹன்சிகாவும் ஒருவர். இருவரும் இணைந்து வாலு படத்தில் நடித்தனர். காதல் கை கூடவில்லை. தொடர்ந்தும் படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர்.
சிம்பு, வெங்கட்பிரபுவின் மாநாடு படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இதற்காக தனது உடல் எடையைக் குறைக்க சிம்பு வெளிநாட்டில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் ஹன்சிகாவுடன் சிம்பு மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஹன்சிகா, தனது 50 ஆவது படமான மஹா-வில் நடித்து வருகிறார்.
ஸ்ரீகாந்த் முதன்மை வேடத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தில் சிம்புவும் முக்கியமான ஒரு ரோலில் நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மஹாவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு துருக்கியில் நடைபெற இருக்கிறது. இதில் சிம்பு பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment