ஆர்யா-சாயிஷா திருமணம் ஐதராபாத்தில் நடைபெற்றது. தாஜ் பலக்னாமா பேலஸ் என்ற ஆடம்பரமான ஹோட்டலில் நடைபெற்றது. பலக்னாமா என்ற மன்னருடைய அரண்மனை தற்போது நட்சத்திர ஹோட்டலாக இருக்கிறது.
பல இலட்சம் செலவு செய்து நடத்தப்பட்ட இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு இரு வீட்டாரது குடும்பத்தினர் தவிர நெருங்கிய நண்பர்கள் மட்டும் அழைக்கப்பட்டனர். சூர்யா, கார்த்தி, இயக்குநர் விஜய், தயாரிப்பாளர் தனஞ்செயன் உள்ளிட்ட வெகு சிலரே பங்கேற்றனர்.
பத்திரிக்கையாளர்களுக்காக சென்னையில் ஆர்யா - சாயிஷா திருமண வரவேற்பு நடந்தது. தேனாம்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் நடந்த பத்திரிகையாளர்கள் விருந்தில் தம்பதியரை பலரும் வாழ்த்தினர்.
நிகழ்ச்சியில் சாயிஷாவை அறிமுகப்படுத்திய இயக்குநர் ஏஎல்.விஜய், பரத், சாந்தனு, டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் சிலரும் பங்கேற்றனர்.
0 comments:
Post a Comment