சென்னை: தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, 'டார்ச் லைட்' சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இன்னும் ஒரு மாத காலத்தில் தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வரும் நிலையில் இந்த தகவல் இன்று வெளியாகியுள்ளது.
வாரிசு அரசியல் கூடாது, ஏழைகளை அரசியல்வாதிகள் ஏழைகளாகவே வைத்துள்ளனர், அதுதான் அவர்களின் வெற்றிக்கான சாவியாக இருக்கிறது என கமல் தெரிவித்திருந்தார்.
தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளில் மக்கள் நீதி மையம் 'டார்ச் லைட்' சின்னத்தில் போட்டியிட உள்ளது.
தனக்குப்பின் தன் மகனோ, மகளோ, மைத்துனரோ வருவார்கள் என்ற அரசியல் கூடாது. நான் தமிழன் என்று வாய்ப்பு கேட்காதீர்கள். தகுதியை வைத்து வாக்கு கேளுங்கள். தமிழர்கள் என்பது விலாசம். திறமை இல்லாத தமிழனுக்கு எல்லா வாய்ப்பையும் அளிக்க வேண்டும் என்பது இல்லை. திறமை உள்ள தமிழனுக்கே வாய்ப்பு என்றார்.
மேலும் தனது கட்சிக்கு சின்னம் ஒதுக்கியதற்காக தேர்தல் கமிஷனுக்கு கமல் நண்றி தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment