கிளிநொச்சி தர்மபுரம், பகுதியில் கசிப்புடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியிலிருந்து, 115 போத்தல் கசிப்பும் ஆயிரத்து, 325 போத்தல் கோடாவும் 8 பரல் மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணங்களும் மீட்கப்பட்டன.
கிளிநொச்சி மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சதுரங்க தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment