தாயகம் திரும்பும் தமிழ்மகன்!!!

இந்தியா விமானி அபிநந்தனை விடுதலை செய்வதற்காக பாகிஸ்தான் நாட்டிற்கு அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் கடும் அழுத்தம் கொடுத்ததையடுத்து இந்தியவிமானி அபிநந்தன் இன்று விடுதலை செய்யப்படவுள்ளார்.
அமைதியை கருத்தில் கொண்டு நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானியை விடுவிக்க போகிறோம் என்று இம்ரான் கான் நேற்று கூறினார்.


ஆனால் இதற்கு பின் வெறும் அமைதி மட்டுமே காரணம் கிடையாது. உலக நாடுகள் பலவற்றின் அழுத்தமும் இதற்கு பின் இருக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடங்கி சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மான் வரை இதற்காக அழுத்தம் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் அளித்த அழுத்தத்தை அடுத்துதான் இம்ரான் கான் இந்த திடீர் முடிவிற்கு வந்துள்ளார். ஆசியாவில் அணு ஆயுதம் பொருந்திய இரண்டு நாடுகள் அடித்துக் கொள்வது சரியாக இருக்காது, இந்த பிரச்சனையை தீர்க்க அபிநந்தனை விடுவிப்பதே சரியாக இருக்கும் என்று இந்த மூன்று நாடுகளும் ஆலோசனை வழங்கியதையடுத்தே அபிநந்தன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, அபினந்தன் ராவல்பிண்டி இராணுவ முகாமில் இருந்து விமானம் மூலம் லாகூருக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் அங்கிருந்து இன்று மதியம் வாகா எல்லைக்கு கொண்டு வரப்பட்டு, இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரை வரவேற்பதற்காக ராணுவ அதிகாரிகள், அரசுத்துறை உயர் அதிகாரிகள் வாகா எல்லைக்கு சென்றுள்ளனர். அபினந்தனின் பெற்றோரும் அவரை வரவேற்க நேற்று இரவே டெல்லி புறப்பட்டு வந்தனர்.

இதேபோல் வரவேற்பதற்காக ஏராளமான பொதுமக்கள் இன்று காலை முதலே வாகா எல்லையில் குவியத் தொடங்கினர். இது சம்மந்தமான கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவண்ணம் உள்ளது.


Share on Google Plus

About Thana Samugam

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment