மதவாச்சி காகுபுக்பொல பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் பெண் உட்பட நால்வர் காயமடைந்தனர்.
வவுனியா தாண்டிகுளம் பகுதியிலிருந்து விமானநிலையம் நோக்கி பயணித்த வேனொன்று முன்னால் பயணித்துக் கொண்டிருந்த கனரக வாகனத்துடன் மோதியமையா விபத்து இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்கள் தாண்டிகுளத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
பிரான்சிலிருந்து வந்திருந்த இளைஞரை விமானநிலையத்திற்கு வழி அனுப்ப சென்ற நிலையிலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பாக மதவாச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment