மீடூ விவகாரம் சின்மயி ராதிகா மோதல்

மீடூ விவகாரம் ஓய்ந்து இருந்தாலும், தொடர்ந்து அது பற்றி குரல் கொடுத்து வருகிறார் பாடகி சின்மயி. பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களையும் டுவிட்டரில் அம்பலப்படுத்தி வருகிறார். 

இந்த நிலையில், நடிகை ராதிகாவுக்கு டுவிட்டரில் கேள்வி எழுப்பியிருக்கும் சின்மயி, இந்தத் துறையில் வெற்றிபெற நீங்கள் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறீர்கள். ஒரு பெண்ணாக அதிகாரத்தில் இருக்கும் ஆண்கள் எப்படி பெண்களைக் கொடுமைப்படுத்துவார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால், ஏன் 'வாணி ராணி' தொடரில் 'மீ டூ' இயக்கத்தை பிளாக்மெயில் செய்யும் செயலாக சித்தரித்திருந்தீர்கள்?. என்று கூறியுள்ளார். 

“நான் இந்தத் துறையில் நீண்ட நாள்களாக இருந்து வருகிறேன், எல்லோரது உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்திருக்கிறேன். பெண்கள் உரிமை என்றால் தவறாமல் முன் நிற்பேன். இது துறையில் உள்ள அனைவருக்கும் தெரியும். நீங்கள் சொன்ன தொடரின் கதையில் உங்களுக்குத் தெளிவு வேண்டுமென்றால், என்னை அலுவலகத்தில் வந்து சந்தியுங்கள்” என்று பதில் அளித்துள்ளார் ராதிகா.



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment