விஷாலுக்காக அவர் நடித்த பாண்டியநாடு படத்தில் சின்ன வேடத்தில் நடித்தவர் விக்ராந்த். அந்த நன்றிக்கடனுக்காக விக்ராந்தை ஹீரோவாக வைத்து ஒரு படம் தயாரிப்பதாக அறிவித்தார் விஷால். அறிவிப்பு, அறிவிப்பாக மட்டுமே உள்ளது.
இதற்கிடையில் பக்ரீத் படத்தில் நடித்து வரும் விக்ராந்த், அவரது சகோதரர் சஞ்சீவ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். படத்தின் திரைக்கதையை விஜய்சேதுபதி எழுதுகிறார்.
ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் இத்தனை பிசியிலும் நட்புக்காக கை கொடுத்திருக்கிறார் விஜய்சேதுபதி. 'ஆரஞ்சு மிட்டாய்' படத்திற்குப் பிறகு விஜய்சேதுபதி திரைக்கதை எழுதும் 2 ஆவது படம் இது.
அந்தப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலும் இணைந்திருக்கிறார். விக்ராந்த் நடிப்பில் உருவாகி வரும் வெண்ணிலா கபடி குழு 2, சுட்டுப்பிடிக்க உத்தரவு, பக்ரீத் போன்ற படங்கள் விரைவில் வெளியாகவிருக்கிறது.
0 comments:
Post a Comment