கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று தங்கமலை பெருந்தோட்டத்தில் கண்டு பிடிக்கப்பட்டது.
பதுளை ஹப்புத்தளை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே குறித்த கசிப்பு நிலையம் கண்டறியப்பட்டது.
பரல்களில் நிரப்பப்பட்டிருந்த கசிப்பு , கசிப்பு தயாரிப்பதற்கான ‘ ஸ்பீறிட்’ என்று அழைக்கப்படும் மூலப் பொருள்கள் மற்றும் உபகரணத் தொகுதிகள் என்பவற்றையும் பொலிஸார் மீட்டனர்.
அங்கிருந்து தப்பியோட முயற்சித்த நான்கு பேரும் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.
0 comments:
Post a Comment