நீதிமன்ற அனுமதிக்காய் காத்திருக்கும் பொலிஸார்

போதைப்பொருளுடன் கைதான சந்தேகநபர்களை தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க வத்தளை  நீதவான் நீதிமன்ற அனுமதியை எதிர்பார்ப்பதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஜா-ஹெல தெற்கு நிவந்தம பிரதேசத்தில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்பிரிவினரால் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் நேற்றுக் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடமிருந்து, 16 கிலோ ஹெரோயின் உள்ளிட்ட 21 கிலோ போதைப்பொருள்கள் மீட்கப்பட்டன. 

சந்தேகநபர்களிடமிருந்து மேலும் 4 ரிவோல்வர் துப்பாக்கிகளும் மற்றும் 12 கைப்பேசிகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பொலிஸ்  ஊடக பேச்சாளர் , பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment