யாழ்.சாவகச்சேரி மட்டுவில் பகுதியிலுள்ள வீடொன்றின் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில், ஒருவர் பொது மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தின்போது இளைஞர் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கைதாகியவர் வழங்கிய தகவலையடுத்து மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டதோடு, அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றையும் கைப்பற்றியதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment