யாழ்.பருத்தித்துறை தும்பளை வீதியில் அமைந்துள்ள 150 வருடங்கள் பழமை வாய்ந்த தெருமூடி மன்றம் முற்றாகச் சேதமடைந்தது.
தொல்பொருள் திணைக்களத்துக்கு உரிய குறித்த மன்றம் இரு மாதங்களுக்கு முன்னர் வாகன விபத்தொன்றால் பகுதியளவில் சேதமடைந்தது. இதனையடுத்து, அது சீராகப் பராமரிக்கப்படவில்லை.
இந்த நிலையில், நேற்று சீமெந்துடன் சென்ற வாகனமொன்று மோதியதை அடுத்து மன்றம் சேதமடைந்து வீழ்ந்தது என்று அப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment