மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் கஞ்சாவுடன் கைதானவர் தாக்குதல் நடத்தியதில் பொலிஸ் சாஐன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இச் சம்பவம் நேற்று இடம்பெற்றதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து குறித்த பிரதேசத்தில் உள்ள 26 வயதுடைய இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.
சந்தேக நபரிடமிருந்து 2 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. சந்தேகநபரின் ஒரு கையில் விலங்கிட்டு விலங்கின் மறு பகுதியை பொலிஸ்சாஜன் தனது கையிலிட்டாவாறு அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பொலிஸ் நிலைய சிறைக்கூட்டில் அடைக்க முயன்றபோது சந்தேகநபர் பொலிஸ்சாஜன் மீது விலங்குடன் முகத்தில் தாக்குதல் நடத்தி இருவரும் கட்டிப்பிடித்து அடிபட்டதில் பொலீசாஜன் படுகாயம் அடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
படுகாயமடைந்த பொலிஸ் வாழைச்சேனை வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளும் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
0 comments:
Post a Comment