வாகா எல்லை வழியாக இந்தியா வரும் அபிநந்தனை வரவேற்க பெருமளவிலான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானிலிருந்து விடுவிக்கப்படும் இந்திய விமானி அபிநந்தன் ராவல்பிண்டி ராணுவ முகாமிலிருந்து லாகூருக்கு விமானத்தில் அழைத்து வரப்படவுள்ளார்.
பின்னர் லாகூரிலிருந்து வாகா எல்லை வழியாக இந்தியாவுக்கு அழைத்து வரப்படவுள்ளார். எனினும் இதுபற்றி அதிகாரபூர்வத் தகவல் வெளியாவில்லை.
பஞ்சாப் முதல்வர் அமிரீந்தர் சிங் அபிநந்தனை வரவேற்கிறார். பின்னர் மூத்த ராணுவ அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பிறகு, அவர் மருத்துவ பரிசோதனைக்கும் அனுப்பிவைக்கப்படுவார்.
0 comments:
Post a Comment