பூநகரி அரசர்கேணி பகுதியிலிருந்து கிளிநாச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட ஒருதொகை மரக்குற்றிகள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சுமார் நான்கு லட்சம் பெறுமதியான முதுரை மரக்குற்றிகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
பூநகரி பொலிஸ் பொறுப்பதிகாரி கபிலபண்டாரவின் வழிநடத்தலில், உப பரிசோதகர் பூங்குன்றன் தலைமையிலான குழுவினர் மரக்கடத்தலை முறியடித்தனர்.
மரக்குற்றிகளை ஏற்றி வந்த வாகனச் சாரதி மற்றும், உதவியாளர் தப்பிச் சென்றுவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment