மயிரிழையில் உயிர் தப்பிய பங்களாதேஷ் வீரர்கள்

நியூஸிலாந்தின் இரு மசூதிகளில்  இனந்தெரியாத சிலரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 49 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தையடுத்து அங்கிருக்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்களின் விடுதிக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்துப் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் செய்தித் தொடர்பாளர் ஜலால் யூனுஸ் தெரிவித்ததாவது,

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி வீரர்கள் ஹக்லி பூங்காவுக்கு அருகிலுள்ள மசூதிக்கு தொழுகைக்காகச் சென்றனர்.

துப்பாக்கிச் சூடு குறித்து கேள்விப்பட்டதும் அங்கிருந்து வெளியேறி உயிர் தப்பினார்கள்.

‘‘அனைத்து வீரர்களும் மசூதிக்குள் தொழுகைக்குச் செல்வதற்காகச் சொகுசுப் பேருந்தில் மசூதிக்கு வந்தோம். மசூதி வளாகத்துக்குள் கால் வைத்ததும் துப்பாக்கிச் சூடு நடந்தது.

அங்கிருந்து ஓடி உயிர் தப்பினோம். யாருக்கும் எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை. வீரர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். 

ஆனால், அதிர்ச்சியில் உறைந்துள்ளார்கள். அவர்கள் தங்கியுள்ள விடுதிக்குப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது’’என்றார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment